Saturday 4 February 2017

ஸ்டண்ட் சோமு வரலாறு


தஞ்சை மாவட்டம் பூண்டி கிராமத்தில் சோமூ விஞ்சராயர் என்ற ஸ்டண்ட் சோமூ ஜனவரி 26 1907-ஆம் ஆண்டு பிறந்தார். திருச்சியில் பள்ளி படிப்பை தொடங்கி. பின்பு நாடகத்துறையில் நடித்து அங்கிருந்து திருச்சியில் நடைபெற்ற கிரேட் ராயல் சர்க்கஸ் கம்பனியில் 1927-ஆம் ஆண்டு சேர்ந்து கத்திச்சண்டை, ஜிம்னாஸ்ட்டிக், குதிரை ஏற்றம் டிரிப்பீஸ்(ரிங் பார் கலை) போன்ற கலைகளை கற்று பின்பு சேலம் மாடர்ன் தியட்டர்ஸில் மாத சம்பளத்தில் பணி புரிந்தார். தான் கற்ற கலைகளை பார்த்து வியந்த மாடர்ன் தியட்டர்ஸ் அதிபர் டி.ஆர்.சுந்தரம் தனது நிறுவனம் தயாரித்து இயக்கிய படங்களில் நடிக்க வைத்தும், தனது நிறுவனம் தயாரித்த 1940-ஆம் ஆண்டு பி.யு.சின்னப்பா நடித்த முதல் இரட்டை வேட படமான உத்தம புத்திரன் என்ற படத்திலும் சண்டைக் காட்சிகளை இயக்கவும் சோமு என்ற கதாபாத்திரத்தில் நடிக்கவும் வைத்தார். அதே வருடம் எஸ்.எஸ்.கொக்கோ மற்றும் பி.ஆர்.லட்சுமிதேவி நடித்த டுபான்குயின் படத்திலும் நடித்தார். 1942-ல் மாடர்ன் தியட்டர்ஸின் மனோன்மணி படத்திலும் ஸ்டண்ட் இயக்குனராக பணியாற்றினார். பின்னர் ஜெமினி வாசன் அவர்களின் நட்பு கிடைத்து 1943-ஆம் ஆண்டு ரஞ்சன், ராஜகுமாரி நடித்த மங்கம்மா சபதம் படத்திலும் 1944-ஆம் ஆண்டு பி.யூ.சின்னப்பா நடித்த ஜகதலப்பிரதாபன் படத்திலும் 1945-ல் டி.ஆர்.மகாலிங்கம் நடித்த ஷ்ரிவள்ளி மற்றும் வேதாள உலகம் படத்திலும் சண்டை பயிற்சியாளாராக பணியாற்றினார். 1947-ஆம் வருடம் தியாகி, பங்கஜவள்ளி, சித்ரபகாவலி, வினோதனி போன்ற படங்களிலும் வி.என்.ஜானகிவுடன் முக்கிய கதாபாத்திரங்களிலும் நடித்தார். அதே வருடம் ஜீபிட்டர் பிலிம்ஸ் தயாரித்த எம்.ஜீ.ராமச்சந்திரன் அவர்கள் முதல் கதாநாயகனாக நடித்த ராஜகுமாரி படத்தில் எம்.ஜி.ராமச்சந்திரன் அவர்களுக்கு வாள் சண்டை பயிற்சி அளித்து எம்.ஜீ.ஆரின் மானாசீக குரு என்ற அந்தஸ்தையும் பெற்றார். 1948-ஆம் ஆண்டு தமிழ் திரை உலகம் போற்றும் வகையில் அமைந்த ஜெமினி பிக்சர்ஸ்ஸின் எஸ்.எஸ்.வாசன் தயாரித்து இயக்கிய எம்.கே.ராதா, டி.எம்.ராஜகுமாரி மற்றும் ரஞ்சன் வில்லனாக நடித்த சந்தரலேகா படத்தில் பிரம்மாண்ட சண்டைகளை அமைத்து இந்தியா முழுவதும் புகழ் பெற்றார். இத்திரைப்படம் இந்தி, ஆங்கிலம் (சப்டைட்லுடன்) மொழிகளில் வெளியாகி உலக அளவில் இரண்டாவது வசூல் படமாக சாதனை படைத்தது. பின்பு அதே கூட்டனியில் 1949-ல் நடிகர் எம்.கே.ராதா மற்றும் ரஞ்சன் வில்லனாக நடித்த அபூர்வ சகோதரர்கள் படத்தில் மருதைய்யா என்ற கதாபாத்திரத்தில் நடித்து சிறந்த சண்டை பயிற்ச்சியாளாகவும் விளங்கினார். 1950-ல் தமிழ், மலையாளம் மொழிகளில் எடுக்கப்பட்ட சந்திரிக்கா படத்திலும், தமிழ், தெலுங்கு மொழிகளில் எடுக்கப்பட்ட ராஜாவிக்கரமா படத்திலும் நடித்தார். 1953-ல் சரித்தர படமான அவ்வையார் படத்தில் சண்டை காட்சிகளை அமைத்தார். , பின்பு திரை உலகில் வாள் சண்டையில் தனி முத்திரை படைத்த உயர் திரு எம்.ஜீ.ஆர் நடித்த படங்கள் ஜெனோவா, ஆயிரம் தலைவாங்கிய அபூர்வ சிந்தாமணி, மந்திரி குமாரி, பாக்தாத் திருடன், ராஜா தேசிங்கு, மருத நாட்டு இளவரசி, நாம், கணவன், போன்ற படங்களில் சண்டை பயிற்சியாளாராகவும் இருந்தார். பிறகு ஸ்டண்ட் சோமு பார்ட்டி என்ற தலைப்பில் எம்.ஜி.ஆர் நடித்த பல படங்களில் அவர் பெயர் பயன் படுத்தப்பட்டது. இதுவே அவருக்கு அவருடன் பணியாற்றிய ஸ்டண்ட் கலைஞர்கள் குருவிற்க்கு கொடுத்த மரியாதையாக அமைந்தது
ஸ்டண்ட் சோமுவின் நெருங்கிய நண்பராகவும் சகோதராகாவும் இருந்தவர் நடிகர் திலகம் சிவாஜி கணேசன் அவர்கள். அவர் நடித்த முதல் இரட்டை வேட படமான உத்தமபுத்திரன்(1958) படத்தில் மீண்டும் சோமு என்று தன் பெயரை கொண்ட கதாபாத்திரத்தில் நடித்து சண்டை பயிற்ச்சியாளராகவும் தமிழ் திரை உலகில் தனி முத்திரை பதித்தார். அவரை ஸ்டண்ட் உலக சக்கரவர்த்தி அஞ்சா நெஞ்சன் என்றும், ஸ்டண்டுக்கு தந்தை ஸ்டண்ட் சோமு என்றும் நடிகர் திலகத்தாலும், ஸ்டண்ட் கலைஞர்களாலும் பாரட்டப்பட்டார். பின்பு நடிகர் திலகம் நடித்து புகழ் பெற்ற படங்களான மனோகரா, வணங்காமுடி, தங்கமலை ரகசியம், கர்ணன், வீரபாண்டிய கட்டபொம்மன், தங்க பதுமை, அம்பிகாபதி, மக்களை பெற்ற மகராசி, இரும்புத் திரை, புதையல், கந்தன் கருணை, ராஜ ராஜ சோழன் மற்றும் அவர் நடித்த பல்வேறு திரைபடங்களில் சண்டை பயிற்ச்சியாளராகவும் பணிபுரிந்தார். காதல் மன்னன் ஜெமினி கணேசன் நடித்த பூலோக ரம்பை, மாயா பஜார், கற்புகரசி, செளபாக்கயவதி மற்றும் கவிஞர் கண்ணதாசன் தயாரிப்பில் எஸ்.எஸ்.ராஜேந்திரன் நடித்த சிவகங்கை சீமை, .வி.ம் தயாரிப்பில் அதே கண்கள், ஜீப்லி பிக்சர்ஸ் ஷ்ரீராம் நடித்த மர்ம வீரன் படத்தில் தமிழ் திரை உலகில் முதல் முறையாக கத்திச்சண்டையில் தீப்பொறி வர வைத்து புதுமையை புகுத்தினார். தெலுங்கு திரை உலகில் புகழ் பெற்ற என்.டி.ராமாராவ் நடித்த பாதாள பைரவி படத்திலும், மற்றும் பெங்கால், மலையாளம், தெலுங்கு ஆகிய மாற்று மொழி படங்களிலும் புகழ் பெற்று விளங்கினார். 1969-ல் ரஞ்சன் நடித்த கேப்டன் ரஞ்சன் படத்தில் இதுவே திரை உலகில் அவருக்கு கடைசி படமாகவும் அமைந்தது. 1969 பிப்பரவரி 19 ஆம் நாள் இயற்கை ஏய்தினார். தமிழ் திரை உலகில் சண்டை காட்சிகளில் இவருக்கு என்று தனி முத்திரையை பதித்தார். அதற்கு சான்றாக அன்றைய தமிழக முதல்வராக இருந்த புரச்சி தலைவர் எம்.ஜி.ஆர் அவர்களின் ஆணையை ஏற்று எம்.ஜி.ஆர் நகரில் அவருக்கு ஸ்டண்ட் சோமு தெருவை உருவாக்கியது தமிழக அரசு. இது அவருக்கு மட்டுமல்லாமல் ஸ்டண்ட் கலைஞர்களுக்கு கிடைத்த பெருமிதமான வெற்றி. அவரது வாரிசாக எஸ்.எஸ்.கோபால் அவருடைய மகன்களில் எஸ்.ஜி.சிவபிரகாஷ் (ஆக்ஷன் பிரகாஷ்), எஸ்.ஜி.சோமசுந்தரம்(சுப்பிரீம்சுந்தர்சண்டைபயிற்ச்சியாளர்களக பணி புரிந்து வருகிறார்கள்.
வாழ்க ஸ்டண்ட் கலை, வளர்க ஸ்டண்ட் யூனியன்
நன்றி
ரவி நிவேதன்(எஸ்.ஜி.ராஜசேகர் திரைப்பட இயக்குனர்.)
ஸடண்ட் சோமு குடும்பத்தினர்.